
ஆந்திர பிரதேசத்தில் குடிசை பகுதிகளை இடிக்க வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை மீறி துணை ஆட்சியர் டாடா மோகன் ராவ் பொதுமக்களின் குடியிருப்புகளை இடித்து, அவர்களை இடம்பெயரச் செய்தார். நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி குடிசை பகுதிகளை துணை வட்டாட்சியரான டாடா மோகன் ராவ் இடித்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் “உயர் பதவியில் இருந்தாலும், நீதிமன்ற உத்தரவை மீறினால் அது ஜனநாயக ஒழுங்குமுறைக்கு எதிரானதாகும்”, என்று கூறி துணை ஆட்சியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு தாசில்தார் பதவிக்கு மாற்றப்பட்டார். அதோடு ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பொது மக்களை அச்சுறுத்தக் கூடிய வகையில் நடந்து கொண்ட இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவருடைய வேலை இழப்பு மற்றும் குடும்பம் பாதிக்கப்படக்கூடும் என்பதால் நீதிமன்றம் அந்த சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதித்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கவாய் “இந்த நாடு முழுவதும் ஒரு உறுதியான செய்தி செல்ல வேண்டும். யாரும் சட்டத்திற்கு மேல் இல்லை” என்றார்.