உலகளாவிய பல்வேறு கார்ப்பரேட் மற்றும் நுகர்வோர் நிறுவனங்கள் பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் காரணமாக செலவு செலவுகளை குறைப்பதற்கும் வீழ்ச்சியை சமாளிப்பதற்காகவும் ஆயிரக்கணக்கானவர்களை பணி நீக்கம் செய்து வருகின்றது. அதில் தற்போது டெல் நிறுவனமும் இணைந்து இருக்கின்றது. டெல் நிறுவனத்தில் பணிபுரியும் 6650 பேரை அந்நிறுவனம் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.

இதற்கு டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் கிளார்க் ஊழியர்களுக்கு மெமோ அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது “கொரோனாவுக்கு பின்னர் தனிநபரின் கணினிக்கான தேவை குறைந்துள்ளது. மேலும் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்போதைய வர்த்தக சூழல்தான் எதிர்கால சந்தையை நிச்சயமாக்குகின்றது” என்று கூறியுள்ளார்.