அருணாச்சல பிரதேசத்தில் ஆறு சிறுவர்கள் உட்பட 21 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வார்டனுக்கு மரண தண்டனை விதித்து அம்மாநில நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் அரசு நடத்தி வரும் பள்ளியில் வார்டனாக இருக்கும் யும்கென் பக்ரா என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 6 சிறுவர்கள் உட்பட 21 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வெளியே சொல்லக்கூடாது என அவர்‌ மிரட்டி உள்ளார். இதனால் ஆறு மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஒருவர் போலீசுக்கு புகார் கொடுத்த நிலையில் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தற்போது குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை புகார் அளிக்க தவறிய முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் இந்தி ஆசிரியர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.