நண்பனின் கல்யாணத்திற்கு சென்று பரிசு கொடுக்கும் போது மாரடைப்பால் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கல்யாண வீடு பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. வம்சி என்பவர் தனது நண்பனின் திருமணத்திற்காக பெங்களூரில் இருந்து கர்னூலில் உள்ள பெனுமுடா கிராமத்திற்கு சென்றுள்ளார். நண்பனின் கல்யாண நிகழ்ச்சியில் சந்தோசமாக பங்கேற்ற வம்சி சக நண்பர்களுடன் சேர்ந்து மணமகனுக்கு பரிசு கொடுக்கும் போது மயங்கிய நிலையில் தள்ளாடியுள்ளார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் வம்சியை தாங்கி பிடித்து அமர வைத்தனர் அதன் பிறகு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் வம்சி இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத நண்பர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மரணம் யாருக்கு எப்போது வரும் என்பது தெரியாது. மகிழ்ச்சியுடன் திருமண விழாவை கொண்டாடிய வாலிபனுக்கு எதிர்பாராத விதமாக மாரடைப்பால் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.