
இந்திய போஸ்ட் ஆபீஸ் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் பல லட்சம் ரூபாய் ஈட்ட முடிகின்றது. இது மிகவும் பாதுகாப்பானது. இவ்வாறு பாதுகாப்பான மற்றும் அதிக பணங்களை ஈட்டக்கூடிய திட்டத்தில் ஒன்றுதான் கிராம் சுரக்ஷா போஜனா திட்டம். இந்த திட்டத்தில் நீங்கள் தினந்தோறும் 50 ரூபாய் முதலீடு செய்து 35 லட்சம் வரை சம்பாதிக்க முடிகிறது. இதில் எப்படி சேமிப்பது என்று பார்க்கலாம். இந்த கிராம் சுரக்ஷா போஜனா என்பது கிராமின் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.
இந்தத் திட்டம் கடந்த 1995ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 19 வயது முதல் 55 வயது வரை இருப்பவர்கள், இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் நீங்கள் குறைந்தபட்சம் 10 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்திற்கான பிரீமியம் முறை நீங்கள் மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு, ஆண்டுதோறும் செலுத்த முடியும். இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் 19 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் 60 வயதில் 34 லட்சத்து ரூபாய் ஈட்ட முடியும். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு, மக்கள் அனைவரும் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அதுவும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.