
ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த வெங்கடா ராஜேஷ் குமார் என்பவர் 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிட மாகாணத்தில் குடி பெயர்ந்தார். அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அங்கு குடி பெயர்ந்தனர். ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ராஜேஷ் நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜாக்சன்வில்லே பீச்சுக்கு சென்றுள்ளார். அங்கு திடீரென கடல் அலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் ஆழத்திற்கு சென்றதைப் பார்த்த ராஜேஷ் குழந்தைகளை காப்பாற்ற சென்றுள்ளார்.
அவரது மகள் பத்திரமாக காப்பாற்றப்பட்ட நிலையில் மகனைக் காப்பாற்ற ராஜேஷ் முயற்சித்த போது தந்தை மகன் என இருவரும் அலையில் அடித்து செல்லப்பட்டனர். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் இருவரையும் காப்பாற்றி சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராஜேஷ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது மகனுக்கு கடற்கரையில் வைத்தே முதலுதவி கொடுக்கப்பட்டதால் எந்த ஆபத்தும் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.