நடப்பு ஐபிஎல் தொடர் எட்டாவது லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்சை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெற்றியை பதிவு செய்தது.

 17 ஆண்களுக்கு பிறகு சென்னை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு வீழ்த்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தின் நடைபெற்று வந்த சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் இடையிலான போட்டியை நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி கண்டு களித்துள்ளார்.