
CSK மற்றும் RCB இடையேயான நாக் அவுட் ஐபிஎல் போட்டி வருகின்ற மே 18ஆம் தேதி பெங்களூருவில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை பெறும். ஏனென்றால் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்ததால் இன்னும் ஒரு போட்டியில் வென்றால் கூட ஹைதராபாத் அணியும் தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து விடும். அதனால் இன்றைய போட்டியை எதிர்நோக்கி ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.