
தமிழ் சினிமாவில் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜின் மகன் என்ற அடையாளத்தோடு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாந்தனு. அதன் பிறகு சக்கரகட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சாந்தனு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தனக்கென பெயர் சொல்லும் படி ஒரு வெற்றி படத்தை கொடுக்க போராடி வருகிறார். இவர் தற்போது இராவண கோட்டம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது நடிகர் சாந்தனு பேசிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 30 நாட்கள் படப்பிடிப்புக்காக செலவு செய்ய திட்டமிட்ட பணம் 17 நாட்களில் காலியாகிவிட்டது.
படத்தின் தயாரிப்பாளர் நடிகர் பாக்யராஜின் நெருங்கிய நண்பர் என்பதால் சாந்தனுவை நம்பி பொறுப்பை ஒப்படைத்து இருந்தார். இதனால் நடிகர் சாந்தணுவுக்கு நாளுக்கு நாள் மன கஷ்டம் அதிகமாகியுள்ளது. பல்வேறு விதங்களில் படப்பிடிப்பு தளத்தில் வைத்து பலர் பணத்தை மிரட்டி பிடுங்கி உள்ளனர். இதனால் மனம் உடைந்த சாந்தனு யாருக்கும் தெரியாமல் படப்பிடிப்பு தளத்தில் கதறி அழுதுள்ளார். சில சமயங்களில் இதனால் தற்கொலை கூட செய்து கொள்ளலாம் என நினைத்துள்ளார். அதன் பிறகு படத்தில் பணியாற்றியவர்களிடம் பேசி அவர்களுக்கும் தனக்கும் சம்பளத்தில் பெருவாரியாக குறைத்து தான் படப்பிடிப்பை நடத்தி முடித்ததாக உருக்கத்துடன் கூறியுள்ளார்.