கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது அபராதங்கள் மற்றும் கூடுதலாக கட்டணங்கள் செலுத்துவதை தவிர்க்க நீங்கள் சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

வருடாந்திர கட்டணம்

வருடாந்திர கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை மதிப்பிடப்படுகிறது. மேலும் கார்டை பொறுத்து இந்த கட்டணம் மாறுபடும். இதற்கிடையில் வங்கிகள் எப்போதாவது கிரெடிட் கார்டுகளை இலவசமாக வழங்கும். அந்த கார்டுக்கு ஒருபோதும் வருடாந்திர (அ) ஜாயினிங் கட்டணம் இருக்காது. வருடாந்திரக் கட்டணம் செலுத்துவதை தவிர்ப்பதற்கு வருடாந்திர கட்டண அட்டையை தேர்வு செய்ய வேண்டும்.

வட்டி விகிதம்

ஒவ்வொரு பில்லிங் சுழற்சியிலும் உங்களது கிரெடிட்டிலுள்ள முழுத் தொகையையும் செலுத்தவில்லை எனில், அதற்கு வட்டி விதிக்கப்படும். நிலுவைத்தொகை இருப்பின் உங்களுக்கு வங்கி கூடுதல் கட்டணங்களை விதிக்கும். அதோடு உங்களது பில்லை முழுவதுமாக செலுத்த முடியாவிட்டால் 21 மாதங்கள் வரை வட்டி வசூலிக்கப்படாது.

அதிக வரம்புக் கட்டணம்

கிரெடிட்கார்டின் வகையை பொறுத்து, நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறலாம் (அ) மீறாமல் இருக்கலாம். இதனை இலவசமாக செய்ய வங்கிகள் அனுமதிக்கவில்லை. அதற்கு பதில் அட்டை வழங்குபவர் உங்களிடம் ஒரு பெரிய தொகையை வசூலிப்பார். ஏரளமான வங்கிகள் குறைந்தபட்சம் ரூபாய்.500 வசூலிக்கிறது.

தாமதமாக செலுத்தும் கட்டணம்

நிலுவைத்தொகையை செலுத்த முடியாவிட்டால், வங்கிகள் குறைந்தபட்சமான தொகையை செலுத்துவதற்குரிய விருப்பத்தை உங்களுக்கு வழங்குகிறது. அதுவும் உங்களால் முடியாவிட்டால், தாமதமாக பணம் செலுத்துவதற்குரிய கட்டணம் வசூலிக்கப்படும். இது உங்களது ஸ்டேட்மென்ட் பேலன்ஸ் அடிப்படையில் வசூல் செய்யப்படும்.