
இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாகார்ஜுனா சைமன் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் கூலி படத்தில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது.
அந்த காட்சியில் நாகார்ஜுனா கத்தியால் ஒருவரை அடிப்பது போல இருக்கின்றது. இதனை படப்பிடிப்பில் இருந்த நபர் ஒருவர் பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார். இந்தக் காட்சி வெளியானதால் எனது இரண்டு மாத உழைப்பு வீணாகிவிட்டது என லோகேஷ் கனகராஜ் தனது இணையதள பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.