திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் பின்பகுதி சேதம் அடைந்து எண்ணெய் கசிந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் குடங்கள் மற்றும் பக்கெட்டுகளை எடுத்து வந்து சமையல் எண்ணெயை பிடித்துச் சென்றனர்.

இந்நிலையில் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் விபத்தில் கசிவு ஏற்பட்டு வெளியேறிய சோயா ஆயிலானது சுத்திகரிக்கப்படாதது மற்றும் சமையலுக்குப் பயன்படாத எண்ணெயாகும். எனவே இந்த சோயா ஆயிலை பொதுமக்கள் யாரும் உணவு பொருளாக பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.