
இந்தியாவில் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதேபோன்று வெளிநாடுகளிலும் தற்போது தீபாவளி பண்டிகை பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தீபாவளி பண்டிகையை விருந்து வைத்து கொண்டாடியுள்ளார். இந்த விருந்தில் அசைவ உணவுகள், மது வகைகள் இடம்பெற்று இருந்தன.
இது குறித்து இங்கிலாந்தில் வசிக்கும் இந்து தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து பிரதமரின் விருந்தில் அசைவம் பரிமாறப்பட்டது இந்துக்களை அவமதிப்பது போன்றதாகும் என விமர்சித்துள்ளனர். ஆனால் 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்து பிரதமராக இருந்த ரிஷிசுனக் தீபாவளி பண்டிகை விருந்து எந்தவித அசைவம் அதுவும் இடம்பெறவில்லை என இங்கிலாந்து வாழ் இந்துக்கள் சாடியுள்ளனர்.