
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ஓலா நிறுவனத்திற்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஓலா பயணிகள் அவர்கள் பணத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக அல்லது கூப்பன் மூலமாகத் திருப்பிப் பெறுவதற்கான விருப்பத்தை தேர்வு செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதுவரை, ஓலா நிறுவனம் பயணிகளுக்கு எந்தவிதமான விருப்பமும் இல்லாமல், மக்களுக்கு கூப்பன்களை மட்டுமே வழங்கியது, இது பயணிகள் உரிமைகளை மீறுவதாக கருதப்பட்டது.
மேலும், ஓலா நிறுவனத்தில், அதன் பிளாட்ஃபார்மில் புக்கிங் செய்யப்பட்ட அனைத்து ஆட்டோ பயணங்களுக்கும் பயணச் சீட்டு அல்லது ரசீது வழங்கும் விதமான முறையை அறிமுகப்படுத்துமாறு நுகர்வோர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பயணிகளின் பிரச்சினைகள் மற்றும் புகார்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னர் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் மட்டும், 2000-க்கும் மேற்பட்ட புகார்கள் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு உதவி மையத்தில் பதிவாகியுள்ளன, இதில் அதிகபட்சமாக அதிக கட்டணக் கொள்கைகள், பணம் திருப்பிப் பெறாதது போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.