
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்ட உரையாற்றினார். அப்போது ஒடிசாவில் இரட்டை என்ஜின் ஆட்சியினால் வளர்ச்சிக்கான பயணத்தின் புதிய சிறகுகளை பெற்றிருப்பதாக கூறினார். மேலும் என் பிறந்தநாளின் போது அம்மாவிடம் நான் ஆசி பெறுவேன். தற்போது அவர் உயிருடன் இல்லை. இந்நிலையில் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர் எனக்கு இனிப்பு ஊட்டிய போது என்னுடைய தாயின் நினைவு வந்தது.
அவரின் ஆசிர்வாதம் ஆகியவைதான் உணர்வு பூர்வமான அனுபவம். நான் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியது குறித்து காங்கிரஸ்காரர்கள் விமர்சனம் செய்கிறார்கள். நான் தலைமை நீதிபதி வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டது அவர்களுக்கு பிடிக்கவில்லை. மேலும் அதிகாரப்பசி உள்ளவர்கள் நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என நினைக்கிறார்கள், அதை பொறுக்க முடியாமல் தன்னை விமர்சிப்பதாக மோடி கூறியுள்ளார்.