மலையாள திரையுலகில் ஆரம்பித்த பாலியல் குற்றச்சாட்டுகள் தற்போது தெலுங்கு திரையுலகிலும் பரவியுள்ளன. பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர், தனது குழுவில் பணியாற்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜானி மாஸ்டரின் மனைவி ஆயிஷா, தன் கணவர் ஒரு அப்பாவி என்றும் அவர் விரைவில் குற்றச்சாட்டுகளை மீட்டு வெளியே வருவார் என்றும் ஏற்கனவே செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அதோடு, அவர் மீது குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், தன் கணவரை விட்டு பிரிவதற்கு தயார் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் ஆயிஷாவும் விரைவில் கைது செய்யப்பட உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மைனர் பெண்ணை மதம் மாற்றி, ஜானி மாஸ்டரை இரண்டாவது திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும், இதுதொடர்பாக அவரது மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.