
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பார்டர்- கவாஸ்கர் தொடரில் 5 நாள் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் முதல், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா குறித்து ஆஸ்திரேலியா வர்ணனையாளர் ஈஷா குகா கூறிய வார்த்தை சமீபத்தில் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில் ஈஷா குகா கூறியதாவது, போட்டியின் போது மற்றொரு வர்ணனையாளர் MVP எனக் கூறினார் MVP என்றால் most valuable player என்பது அர்த்தமாகும். ஆனால் ஈஷா குகா இந்த வார்த்தையை மாற்றி most valuable primate என கூறினார்.
இதில் பிரைமேட் என்பது குரங்கினத்தை சேர்ந்த ஒரு விலங்கை குறிக்கும் வார்த்தையாகும். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பும்ராவின் ரசிகர்கள் வர்ணனையாளரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ஈஷா குகா தான் தவறாக பயன்படுத்திய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த பதிவில் நான் பும்ராவை மிகவும் போற்றும் நபர். ஆனால் நான் பயன்படுத்திய வார்த்தை தவறானது என்பதால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பேசியதில் வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை மக்கள் அறிவார்கள் என நம்புகிறேன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.