
அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில், ஒரு மாணவிக்கு அசிங்கமான செய்திகளை அனுப்பி தொந்தரவளித்ததாக புகாரளிக்கப்பட்ட பேராசிரியர் பாவிக் ஸ்வாடியா இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளார். GLS பல்கலைக்கழகத்தில் கணக்கு பேராசிரியராக இருந்த இவர், 2024 நவம்பர் மாதத்திலிருந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாணவி கூறியதன்படி, வாட்ஸ்அப்பில் தொடர்ந்து அனாகரிகமான செய்திகளை அனுப்பியும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்புமாறு கேட்டு தொந்தரவு செய்து துன்புறுத்தியதாக புகார் கூறப்பட்டுள்ளது. பேராசிரியர் தனது சில சாட்களை அழித்துவிட்டாலும், மாணவி அவற்றை நிரூபிக்க கூடிய ஆதாரங்களை வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் மனஅழுத்தம் அடைந்த மாணவி, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் நேரடியாக புகார் அளித்தபோது, உடனடியாக அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக நிர்வாகம், இந்த விவகாரத்திற்காக ஒரு விசாரணை குழுவை அமைத்துள்ளது, மேலும் அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதேநேரத்தில், மாணவர் அமைப்பின் தலைவர், இந்த பேராசிரியரின் செயலை கண்டித்ததோடு, பல்கலைக்கழகம் அவருக்கு எதிராக காவல்துறையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.