
நாடு முழுவதும் கோகோ கோலா என்ற குளிர்பானம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவனம் பல்வேறு ஃபேவரைட்களில் குளிர்பானங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளில் விற்கப்படும் குளிர்பானங்களில் குளோரேட் என்ற ரசாயனம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவற்றை திரும்ப பெற்றுக் கொள்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் செய்யப்பட்ட பரிசோதனையில் சில பானங்களில் குளோரைட் அதிகமாக இருந்தது தெரியவந்தது.
இங்கிலாந்தில் உள்ள அந்நிறுவனங்களில் அதிக அளவு குளோரேடு கலக்கப்பட்டுள்ளதா என்ற ஆய்வு செய்து வருவதாக உணவு தர நிர்ணய நிறுவனம் உறுதி செய்துள்ளது. குளோரேடு என்பது குளோரின் சுத்திகரிப்பு ரசாயனம் ஆகும். இது நீர் சுத்திகரிப்பு மற்றும் உணவு பதப்படுத்த பயன்படுத்தப்படும். இது குறிப்பாக குழந்தைகளின் அயோடின் அளவை குறைகின்றது. அதோடு கடந்த 2015ம் ஆண்டின் அறிவியல் கருத்துபடி குளோரேட்டிங் நீண்டகால வழிபாடு சிறுவர்களுக்கு குறிப்பாக இலகுவான அல்லது மிதமான அயோட்டின் குறைபாடு உள்ளவர்களுக்கு உடல்நல குறைவை ஏற்படுத்துவதாக ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.