
தெலுங்கானா மாநிலத்தில் ஜாங்கான் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருவாய்த்துறை மந்திரி பொம்கு லேடி, ஸ்ரீனிவாசன் ரெட்டி பங்கேற்றனர். நலத்திட்ட உதவிகள் வழங்க ஆயத்தமாகி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ பல்லா ராஜேஸ்வர ரெட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ளார். ஆனால் அவரை பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் காவல்துறையினருக்கும், ப.ஆர்.எஸ் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், முதல் மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு எதிராகவும் பி.ஆர்.எஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனால் நலத்திட்டம் வழங்கும் இடம் போர்க்களம் போல மாறியது.
வாக்குவாதம் மோதலாக மாறி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். பி.ஆர்.எஸ் கட்சி எம்.எல்.ஏ பல்லா ராஜேஸ்வர் ரெட்டி மீது முட்டை வீசி தாக்குதல் நடந்தது. பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் தடியடி நடத்தி கலவரத்தை நிறுத்தியுள்ளனர். அதன் பின் கலவரத்திற்கு காரணமாக இருந்த ராஜேஸ்வர ரெட்டி மற்றும் பி.ஆர்.எஸ் கட்சியின் ஆதரவாளர்கள், முக்கிய தலைவர்களை கைது செய்துள்ளனர்.