உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பல முக்கிய மாற்றங்களை பிசிசிஐ முன்மொழிந்து உள்ளது. அதன்படி U-23 வீரர்களுக்கான CK நாயுடு டிராபியில் இனி டாஸ் போட்டு பவுலிங் மற்றும் பேட்டிங்கை தேர்வு செய்யும் முறை இருக்காது என்றும் ஆடுகளத்திற்கு முதலில் வரும் அணி பேட்டடிங் அல்லது பவுலிங்கை தேர்வு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பலனளித்தால் ரஞ்சி கோப்பையிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.