
கேரளா மாநிலம் ஆலப்புழா என்னும் பகுதியில் 70 வயது மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்த 29 வயது இளைஞன் 7 சவரன் தங்க நகையை கொள்ளையடித்ததுடன் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
தனேஷ் என்ற இளைஞர் மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்ட அவர் சனிக்கிழமை இரவு மூதாட்டியின் வீட்டுக்குள் கொள்ளையடிக்க நுழைந்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த இளைஞர் மூதாட்டியை மிரட்டியதுடன் அவர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் அவரிடம் இருந்த 7 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்ததுடன் மூதாட்டியை அருகிலுள்ள அறைக்குள் பூட்டி வைத்துள்ளார். பின் அவருடைய செல்போனையும் அந்த இளைஞர் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
மறுநாள் காலையில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வெளியே வந்த மூதாட்டி இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனேஷை தேடி வந்தனர். இதற்கிடையே தனேஷ் திருடிய நகையை விற்க முயன்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் இச்சம்பவம் பற்றி அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.