
தமிழகம் முதல்வர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் டுவிட்டர் கணக்கில் உள்ள ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் தாங்கள் பதிவிட நினைக்கும் கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
தற்போது டுவிட்டரில் ப்ளூ டிக் பயன்படுத்துபவர்கள் மாதந்தோறும் சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாத சந்தாவை டுவிட்டரில் கட்டவில்லை. மேலும் இதனால் தான் தற்போது இவர்களின் twitter கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.