கொல்கத்தாவில் உள்ள தோனோ தன்யோ ஆடிட்டோரியத்தில் நடந்த டாடா ஸ்டீல் செஸ் இந்தியா போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்று, ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பட்டங்களை வென்றார். இந்த மதிப்புமிக்க நிகழ்வில், செஸ் ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெண் FIDE மாஸ்டர் பிரிஸ்டி முகர்ஜி, அகில இந்திய மகளிர் ரேபிட் நிகழ்வில் 7/7 என்ற சரியான மதிப்பெண்ணுடன் வென்றார், இந்த பெண்மணிக்கு மேடையில் மேக்னஸ் கார்லெசன் கோப்பை வழங்கியுள்ளார்.

அந்தப் பெண் இந்த கோப்பையை வாங்கும்போது மேக்னஸ் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த செயலை ஆச்சரியத்துடன் கண்ட மேக்னஸ் புன்னகையுடன் அந்த பெண்மணிக்கு கோப்பையை வழங்கி உள்ளார். அதாவது இந்தியாவின் பாரம்பரியமாக பார்க்கப்படும் ஒன்று பெரியவர் கால்களில் தொட்டு வணங்கி ஆசிர்வாதம் வாங்குவது. இதை அடிப்படையாகக் கொண்டு மேக்னஸ் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று கோப்பையை வாங்கிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.