
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, என்ன அவை சபை குறிப்பிலே ? ஒண்ணுமே கிடையாதே…. அவர்கள் தானே ஏற்றுகிறார்கள். அவர்களே ஏற்றுகிறார்கள், அவர்களே இறக்குகிறார்கள். சட்டமன்றமா நடந்தது ? சட்டமன்றம் உண்மையான சட்டமன்றம் நடந்திருந்தால் ? இந்த நிகழ்வு நடந்திருக்காது. ஆக இந்த நிகழ்வு நடந்த பிறகு… அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் ? என்ன செய்து இருக்கணும் ? டிஸ்மிஸ் செய்திருக்கணும்.
இன்றைய தினம் என்ன ? எவ்வளவு பாலியல் வன்கொடுமைக்கு இன்றைக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துட்டு இருக்கு. எவ்வளவு சட்டம் இயற்றப்பட்டு இருக்கு. ஒரு பெண் மீது, ஒரு நாட்டுடைய முதலமைச்சர் கண்ணெதிரே… சட்டத்தை பாதுகாக்க கூடிய ஒரு அரசாங்கம்.. பெண்ணென்றும் பாராமல், மாண்புமிகு அம்மா எதிர்க்கட்சி தலைவர் என்றும் பாராமல்….
அவருடைய சேலையை பிடித்து இழுக்கின்ற போதும், முடியை பிடித்து இழுக்கின்ற போதும், கடுமையாக தாக்கின்ற போதும், அவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள் ? எதுமே சொல்லலையே… நீங்கள் பத்திரிக்கையிலும், ஊடகத்திலும் கூட பெருசா போடலையே…. எவ்வளவு கொடுமையான ஒரு செயல்.
தன் குடும்பத்தில் ஒருத்தருக்கு இப்படி நடந்திருந்தால் என்ன பாடுபட்டு இருப்போம் ? சிந்தித்து பாருங்கள். தன் குடும்பத்துல தாய்க்கோ, தங்கைக்கோ, சகோதரிக்கோ, தன் மகளுக்கோ இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்பட்டிருந்தால் எப்படி மனம் வேதனைப்பட்டிருக்கும் ? என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட வேதனையோடு தான் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் சட்டமன்றத்திலே நுழையும் போது… மக்களுடைய பேராதரவை பெற்று,
நாட்டுடைய முதலமைச்சராக நுழைவேன் என்று சொன்னார். அதேபோல மக்கள் அவருக்கு தகுந்த அங்கீகாரத்தை கொடுத்து, அதிகமான இடங்களிலே வெற்றி பெற்று… அப்போது நானும் வெற்றிபெற்றேன் 91-லே… புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக அரியணையில் அமர்வித்த மக்கள், தமிழ்நாட்டு மக்கள். அதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.