
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மது கடைகளில் அதிக அளவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில் இதனை தடுக்க அரசு க்யூ ஆர் கோடு மூலமாக மது விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தது. சமீபத்தில் அதிக விலைக்கு மதுபானங்களை வெற்ற ஊழியர்களுக்கு அபராதம் விதித்து அரசு நடவடிக்கை எடுத்தது. இருப்பினும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதற்காகத்தான் தற்போது க்யூ ஆர் கோடு ஸ்கேன் மூலமாக மது விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி மின்னணு பரிவர்த்தனை மூலமாக பணம் செலுத்தி மது வாங்குபவர்களுக்கு கடைகளில் பில் கொடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. மேலும் இந்தத் திட்டம் முதல் கட்டமாக இன்று ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட அரக்கோண ம்உள்ளிட்ட 7 பகுதிகளிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 கடைகளிலும் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட இருக்கிறது.