
சாமியன்ஸ் ட்ராஃபி தொடரில் பாகிஸ்தான்vs நியூசிலாந்து ஆட்டத்தில், நியூசிலாந்து அணியின் பேட்டிங் பிரகாசமாக இருந்தது. வில் யங் மற்றும் டாம் லாதம் இருவரும் சதங்கள் அடித்து, அத்துடன் கிளென் பிலிப்ஸ் அதிரடியான அரைசதம் அடித்து, நியூசிலாந்து 50 ஓவர்களில் 320/5 என்ற வலுவான ஸ்கோரை பதிவு செய்தது. பாகிஸ்தான் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேலும் இந்த ஆட்டம் அவர்களின் தொடக்க ஆட்டத்திலேயே கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோல்வியால், பாகிஸ்தான் அடுத்த போட்டியில் இந்தியாவை எதிர்கொள்வதில் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் நியூசிலாந்து அணியுடன் விளையாடிய நான்கு போட்டிகளிலுமே பாகிஸ்தான் தோல்வியை தான் தழுவியுள்ளது. அதாவது கடந்த 2000, 2006, 2009 மற்றும் 2025 என பாகிஸ்தான் எதிர்கொண்ட அனைத்து சாம்பியன் டிராபி போட்டிகளிலுமே நியூசிலாந்து அணி பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.