9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி மார்ச் 9ஆம் தேதி வரை, பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் இந்திய அணிக்கு உரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்தது. இதனால் இந்திய அணிக்கு உரிய ஆட்டங்கள் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனால் விமர்சனங்கள் எழுந்தது. இதன் காரணமாக இந்திய அணியின் வீரர்களுக்கு பிசிசிஐ சில கட்டுப்பாட்டுகளை அறிவித்துள்ளது.

அதில் இந்திய வீரர்கள் தங்கள் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரை அழைத்துச் செல்லக்கூடாது. வீரர்கள் மயானத்திற்கு செல்லும் போதும், பயிற்சி முடிவடைந்த பின்னரும், அணியினருடன் தான் இருக்க வேண்டும். பயிற்சியை முடித்துவிட்டு சீக்கிரமாக செல்ல கூடாது. அணியுடன் தான் செல்ல வேண்டும். சுற்றுப்பயணத்தின் போது வீரர்கள் தனிப்பட்ட போட்டோ சூட் அல்லது விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது. தனிப்பட்ட பணியாளர்களை அழைத்துச் செல்ல தடை. விதிமுறைகளில் தளர்வு வேண்டும் என்றால் அணி நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த விதிமுறைகளை அமல்படுத்தி, கண்காணிக்க இந்திய அணியின் மேலாளராக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் தேவ்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.