
சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பிறகு அனுஷ்கா சர்மா தன்னுடைய கணவர் விராட் கோலியோடு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதாவது இந்திய அணி வெற்றியை தட்டி தூக்கிய சந்தோஷத்தில் ஓடிவந்து தனது கணவர் விராட் கோலியை கட்டிபிடித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்த நிலையில் ரசிகர்களின் கண்ணில் அவர் அணிந்திருந்த டிரெஸ் பட்டுள்ளது. அதாவது அப்போது அவர் அணிந்திருந்த முத்து வேலைப்பாடு கொண்ட டெனிம் உடையானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது அனுஷ்கா சர்மா மேஜி பாரிஸ் நிறுவனத்தின் லைட் ப்ளூ டர்னிங் செட் சட்டை அணிந்துள்ளார். இதில் முத்து வேலைப்பாடு கொண்ட அகலமான mom ஷார்ட்ஸ் மற்றும் அதற்கு பொருத்தமான முழுக்கை பட்டன் டவுன் சட்டை இடம்பெற்று இருந்தது. அனுஷ்கா சர்மா போட்டிருக்கும் இந்த ஷார்ட் சுமார் 20 ஆயிரத்து 500 மதிப்புள்ளது. இதற்கு பொருத்தமாக அவர் அணிந்திருந்த சட்டை 25 ஆயிரத்து 600 மதிப்புள்ளது. மேலும் அனுஷ்கா சர்மா ஆடம்பரமான நகைகளை தவிர்த்து சில மென்மையான ஸ்டாக்குடு வளையல்களையும் அணிந்திருந்தார்.