நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை நடக்க இருக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்கான ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.

கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த தொடருகான நியூஸிலாந்து அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளரான பென் சீயர்ஸ் காயம் காரணமாக விலகி இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் பொழுது தொடை பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் விலகி உள்ளார். இந்த காயம் குணமடைய குறைந்தபட்சம் அவருக்கு இரண்டு வாரங்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ஜேக்கப் டஃபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.