பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைகுடி கிராமத்தில் துரைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலாண்டம்(65) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அகிலாண்டம் இலுப்பைகுடி-சாத்தனூர் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற மர்ம நபர் அகிலாண்டத்திடம் முகவரி கேட்பது போல நடித்து 5 பவுன் தங்க சங்கிலி பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அகிலாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
முகவரி கேட்பது போல நடித்து…. மூதாட்டியிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்….” கர்ப்பமாக்கி கைவிட்ட திருமணமான வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!
விழுப்புரம் மாவட்டம் சேரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (32), மாற்றுத்திறனாளி பெண். தாயை இழந்த சத்யா, தனது தந்தையுடன் வசித்து வருகிறார். திருமணமாகாமல் 30 வயதைக் கடந்தும் தனிமையில் இருந்த சத்யா, மனஉளைச்சலில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே…
Read moreபடம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள்… தியேட்டரில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்… அச்சச்சோ என்னாச்சு…? போலீசார் விசாரணை…!!
சென்னை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. திரையரங்கம் சந்தோஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென வீசிய சூறைக்காற்றால் சந்தோஷ் திரையரங்கத்தின் மேற்கூரையின் ஒரு…
Read more