
செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அரசிடம் இருந்து பணம் வருகின்றது. முறையாக பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஸ்மார்ட் சிட்டியிலும் பார்த்தீர்கள் என்றால் ? ”ஸ்வச் பாரத்”திற்கான அடட் ஸ்கிம் கூடவே வருகிறது. ஏரிகளை சுத்தப்படுத்துவது, குளங்களை சுத்தப்படுத்துவது, மக்கள் வாக்கிங் போறதுக்கு… சைக்கிள் ட்ராக் எல்லாமே… அதெல்லாம் பெயருக்கு தான் தமிழ்நாட்டில் வேலை நடந்து கொண்டிருக்கிறது.
”ஸ்வச் பாரத்”தில் பார்த்தீங்கன்னா… ஏரியை கிளீன் பண்ணுறது.. கோயம்புத்தூரில் இரண்டு மூன்று நதிகளை நாம சுத்தப்படுத்துகிறோம். தமிழ்நாட்டில் எத்தனை ஸ்மார்ட் சிட்டியில் நடந்திருக்கிறது ? இதெல்லாம் கேள்விகள்… நான் சொல்ல வந்த கருத்து என்னவென்றால் ? இதை தமிழக அரசு தன்னுடைய திட்டமாக… இந்தியாவினுடைய திட்டமாக…. கையில் எடுத்துக் கொண்டு வர வேண்டுமே தவிர, பாரதிய ஜனதாவின் கட்சியினுடைய திட்டம்.. மோடி அவர்களின் திட்டம் என கையில் எடுத்துக்கிட கூடாது.
இன்னைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சமூக வலைதளம் இருப்பதே பொய்யை பேசுவதற்கு தான். பொய் செய்தியை போடுவதற்கு தான். முதலில் டிஆர்பி ராஜா போட்டுக்கிட்டு இருந்தார். அவர் அமைச்சர் ஆன பிறகு அந்த பதவி வேற ஒருத்தருக்கு கொடுத்துட்டாங்க. பொய்யை பேசுவதற்கு அவர்கள் பயன்படுத்துவது சமூக வலைதளம். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை இளைஞர்களுடைய எண்ணத்தை சமூகவலை தளத்தில் வெளிப்படுத்தறாங்க என தெரிவித்தார்.