மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதமான விவாகரத்தில் SCoS என்ற குழுவை மத்திய அரசால் கலைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நிபுணரான ப்ரனாப் சென்
தலைமையில் 14 பேர் கொண்ட குழு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய மாதிரி கணக்கெடுப்புக்காக புதிதாக அமைக்கப்பட்ட ஸ்டீரிங் கமிட்டியின் செயல்பாடுகளுடன், SCoS குழுவின் செயல்பாடுகள் குழப்பிக் கொள்ளக் கூடாது. இதனால் SCoS குழுவை கலைப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால் 2021 ம் ஆண்டிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திருக்க வேண்டும். ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் ஏன் கணக்கெடுப்பு தாமதமாகிறது என்று SCoS குழு உறுப்பினர் தொடர்ந்து கேள்வி எழுப்பினார். இதன் காரணமாக தான் SCoS குழுவை கலைக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.