சிபிஎஸ்இ 12 மற்றும் 10ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்குகிறது. சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 13 வரை பொது தேர்வு நடைபெறுகிறது. ஜே இஇ போன்ற போட்டி தேர்வுகளை மனதில் கொண்டு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என சிபிஎஸ்இ தகவல் அளித்துள்ளது.