திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரித்தன்யா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்காக காங்கிரஸ் முயற்சி செய்கிறது. இந்த வழக்கு தொடர்பாக கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகிய 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாமியார் சித்ரா தேவி இன்னும் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். கவின்குமாரின் தாத்தா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால் காங்கிரஸ் கட்சி தலையிடுகின்றது. காவல்துறையினரின் செயல்பாடு சரி இல்லை. அலைக்கழிக்கிறார்கள். சிபிஐ விசாரணை வேண்டும். ரிதன்யாவிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.