
தென் மாவட்டங்களில் சாதி அடக்குமுறை சங்கவங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, டெரரிஸ்ட் குரூப்புகள் எப்படியாவது வெடிகுண்டா வரான். இது 24 மணி நேரமும் சாதாரண…. நிராயுத பாணியாக இருக்கக்கூடிய மக்களை… ஆடு மேய்க்க கூடிய… மாடு மேய்க்கிற…. கூலி வேலை செய்ய கூடியவர்களை கொலை செய்து…. அவரிடத்தில் இருக்கக்கூடிய அற்ப சொத்து நிலங்களையும் அபகரிக்க வேண்டும்ன்னு நினைக்குறாங்க…
அவுங்க அவர்களுடைய நிலங்களில் அடிமையாக பாடுபடனும்.அவர்கள் எந்த விதமான சொத்தும் உடைமைகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற ஒரு தீய நோக்கம்… மணக்கரை பக்கத்துல இசவன் குலம், தொளப்பம்பட்டி தொழுவாயங்குறிச்சி பக்கத்துல அந்த கிராமத்துல ஒருத்தர் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவருக்கு 6 ஏக்ரோ, 10 ஏக்கர் நிலமோ இருக்கு.
அவருடைய நிலத்தில்…. நெல் விளைஞ்சிடுச்சு… அதுல போய் அந்த மெஷினை கொண்டு போய் அறுக்க முடியல…. மீறி அறுத்ததற்காக… ரெண்டு நாள் கழித்து டீசல் போட போற பங்ல வச்சி அடிச்சி இருக்காரு.இப்படியெல்லாம் கண்ணுக்கு தெரியாம… பொது ஊடகங்களுக்கு செய்திகளே வராம… மைக்ரோ லெவல்ல…. மிக சிறிய அளவுக்கு அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், நாங்குநே, பாளையங்கோட்டை ஏரியால நடக்குது.
மொத்தமா தென் தமிழகத்தில 10, 15 மாவட்டங்களில் நடக்குதுங்க. அதனால தமிழ்நாடு தமிழ்நாடா இருக்கணும்… ஊருக்கு ஊரு ஒரு சாதி நாடானா என்ன ஆகுறது? அதனால எல்லாரும் சேர்ந்து வாழ்ந்தால் தான் அது நாடுன்னு இருக்க முடியும். ஒட்டு மொத்த அனைவருடைய நல்வாழ்வுக்கான அக்கறையோடு நான் சொல்லுறேன் என தெரிவித்தார்.