மராட்டியத்தில் சாங்லி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் திருமண நிகழ்ச்சி கலந்துகொண்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினர். இந்நிலையில் கிருஷ்ணா ஆற்றின் பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாமுமாக உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது.

இதையடுத்து காவல்துறை அதிகாரி கூறியதாவது, கிருஷ்ணா ஆற்றின் பாலம் வழியாக கார் சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டபாட்டை இழந்தது. இதனால் கார் அங்கிருந்த 2 பாலங்களுக்கு நடுவே விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிரசாத் பால்சந்திர கேடேகர் (35), அவரது மனைவி பிரேரனா (36) மற்றும் வைஷ்ணவி சந்தோஷ் நர்வேகர் (21) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் சமர்ஜீத் பிரசாத் கேடேகர் (7), வரத் சந்தோஷ் நர்வேகர் (19), சாக்ஷி சந்தோஷ் நர்வேகர் (42) ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.