
சிங்கப்பூரில் சர்வதேச அளவில் பிரபலமான F1 கார் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்பாராத ஒரு சிறிய உயிரினம் இந்த பந்தயத்தை சிறிது நேரம் தடை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார் பந்தயம் நடைபெறும் சாலையில் சாதாரணமாக நடந்து சென்ற உடும்பு, போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த அரிய காட்சியை கண்ட போட்டியாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். உடனடியாக பந்தயம் நிறுத்தப்பட்டு, உடும்பு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது. உடும்பு கார் போகும் சாலையில் சென்றதால் இறுதிப் பயிற்சிப் போட்டி சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பலரின் பாராட்டை பெற்றுள்ளது. ஒரு சிறிய உயிரினத்தின் காரணமாக பல கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் ஒரு பெரிய போட்டி தடை செய்யப்பட்ட சம்பவம், இயற்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.