
தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதோடு அரசின் பல திட்டங்களை பெறுவதற்கும் ரேஷன் கார்டுகள் ஒரு முக்கியமான ஆவணமாகும். தமிழகத்தில் தற்போது புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரேஷன் கார்டு தாரர்கள் தங்கள் கார்டு பயன்பாட்டில் உள்ளதா அல்லது நீக்கப்பட்டுள்ளதா என்பதை அப்டேட்டில் வைத்திருப்பது அவசியம்.
இதற்காக இ-கேஒய்சி அப்டேட்டை முடிக்க வேண்டும். இதற்கு முதலில் செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அக்டோபர் 31ஆம் தேதி வரை கால அவகாசமானது நீடிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட நாளுக்குள் இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காவிடில் ரேஷன் கார்டுகள் செயலிழக்கக்கூடும். எனவே தமிழ்நாடு அரசின் TNPDS இணையதளத்தில் இகேஒய்சி அப்டேட்டை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் குறிப்பிட்ட நாளுக்குள் இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காவிடில் ஏழை எளிய மக்களுக்கு பொருட்கள் வழங்குவதற்காக 6 மாதங்களுக்கு மேலாக செயல்பாட்டில் இல்லாத கார்டுகள் ரத்து செய்யப்படும்.