
தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் பெண்களின் பிரச்சினைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மீடு புகாரில் சின்மயி கூறி இருந்த நிலையில் தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களைப் புகழ்ந்து ஒரு கவிதை எழுதி வாழ்த்து சொல்லி இருந்தார்.
இதை பாடகி சின்மயி தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து விமர்சித்துள்ளார். அந்த பதிவில் அவ் வீட்டு வாசலை தாண்டும்போது காம வெறியர்களை கேட்கவில்லை பெண். பாதுகாப்பு கேட்கிறாள். பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும் போது அவதூறு கேட்கவில்லை. பெண் நியாயம் கேட்கிறாள். இவர் பெண்களின் பாதுகாப்பு குறித்து எப்படி பேசுகிறார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது
காம வெறியர்களை கேட்க்கவில்லை பெண்;
பாதுகாப்பு கேட்க்கிறாள்.
பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூரு கேட்க்கவில்லை பெண்;
நியாயம் கேட்கிறாள்.I can’t get over how he speaks about women’s lib and safety. The gall. https://t.co/E1671ftmn7
— Chinmayi Sripaada (@Chinmayi) March 8, 2023