கேரளாவில் நாசர் கருத்தேனி என்கிற அப்துல் நாசர்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர், தான் வேலை பார்க்கும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவி, அவரது பெற்றோரிடம் அழுதுக்கொண்டே கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி விசாரணை நடத்திய காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து அப்துல் நாசரை கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.