சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் வசித்து வரும் பெண் ஒருவரின் கைப்பையை ரயிலில்  திருட முயன்றதாக காவல்துறை அதிகாரி வசந்தகுமார் கைது செய்யப்பட்டார். பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஒரு சின்னத்திரை துணை நடிகை என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் சின்னத்திரை நடிகை பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது,”இந்த சம்பவம் ஒரு சில நிமிடங்களுக்குள்ளாகவே நடந்தது. நான் சத்தம் போட்டவுடன் சக பயணிகள் உதவியுடன் அவரைப் பிடித்தேன். பையை வெளியில் எறிந்தவுடன் நான் ரயிலின் அபாய சங்கலியை பிடித்து இழுத்து விட்டேன். பையை வெளியே எறிந்த பிறகு ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று பையை கண்டுபிடித்தோம்.

பிடிபட்ட குற்றவாளியை பெண் போலீசாரிடம் ஒப்படைத்தோம்.”என கூறினார். மேலும் அவர் பிடிபட்டதும் நான் ஒரு காவலர் நான் ஏன் திருட போகிறேன்? என நாடகம் ஆடினார். என்னிடம் நகை உள்ளது அவருக்கு தெரியுமா? என்பது எனக்கு தெரியாது, என்னிடம் ஹேண்ட்பேக் இருக்கிறது என்பதால் திருட முயன்று  இருக்கலாம். ஆனால் ஒரு காவலரே இப்படி நடந்து கொள்வது மிகவும் வேதனையாக உள்ளது.” எனவும் தெரிவித்தார்.