அமெரிக்காவின் நியூயார்க்கில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபராக பிரண்டன் மில்லர் கடந்த 3-ம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இவரும் இவரது மனைவியான கேண்டேசும் சமூக ஊடகத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்கள்.

சொகுசு பங்களா, சொகுசு கார் என்று தனது பகட்டான வாழ்க்கையை சமூக ஊடகத்தில் பதிவிட்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்கள்.

ஆனால் இவர்களின் நிஜ வாழ்க்கை பின்னணியை மிகவும் கொடூரமாக இருந்துள்ளது. மில்லர் தற்கொலை செய்து கொள்ளும் போது அவருக்கு ரூபாய் 250 கோடி கடன் இருந்துள்ளது. இவரது வங்கியில் வெறும் 6 லட்சம் மட்டுமே இருந்துள்ளது.

இவரது சொத்துக்கள் எல்லாமே வங்கி அடமானத்தில் இருந்ததால் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். இப்போது மில்லரின் மனைவி தற்போது தத்தளித்து வருகிறார்.