
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரான அக்ஷய் குப்தா (30) என்ற தொழிலதிபர் வசித்து வந்துள்ளார். இவர் சுகாதாரத் தொழில்நுட்ப ஸ்டாட் ஆப் நிறுவனத்தின் இணை மேலாளர். இவர் பேருந்தில் செல்லும்போது மற்றொரு இந்தியர் இவரை கொடூரமாக கொலை செய்தார். அதாவது கடந்த 14ஆம் தேதி இவர் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது தீபக் கண்டேல் என்பவர் என்பவர் பின்பக்க கையில் அமர்ந்து கொண்டு அவரை திடீரென கத்தியால் தாக்கினார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை செய்தபோது இருவருக்கும் இடையே எந்தவிதமான பிரச்சனைகளோ அல்லது முன் விரோதமோ இல்லை என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து தீபக்கை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் மிகவும் அதிர்ச்சிகரமானதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அதாவது அக்ஷய் பார்ப்பதற்கு தன்னுடைய மாமாவை போல் இருந்ததால்தான் அவரை கொலை செய்ததாக கூறினார். மேலும் இவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.