
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் ஜூலை 24 அல்லது 25 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒன்றில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதன்மூலம் 6 பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் தற்போது 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் நிதியமைச்சராக இருந்தபோது 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே நிர்மலா சீதாராமன் 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தற்போது 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து அவரின் சாதனையை முறியடிக்க இருக்கிறார். மேலும் இதன் மூலம் இந்தியாவில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெற இருக்கிறார்.