இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. ஆனால் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தாமல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மலிவு விலையில் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை 4ஜிக்கு மேம்படுத்துமாறு நிர்வாகம் பயனர்களை அறிவுறுத்தியுள்ளது.

சிலர் தங்கள் நெட்வொர்க்கில் 4ஜியை அறிமுகப்படுத்திய போதிலும் 2ஜி மற்றும் 3ஜி சிம் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களுக்கு நெட்வொர்க் பிரச்சனை ஏற்படுகின்றது. எனவே அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அல்லது சில்லரை விற்பனையாளரிடம் அடையாள சான்றுகளை வழங்கி புதிய சிம் கார்டுகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். உங்களுடைய சிம் வகையை அறிய மொபைலில் இருந்து சிம் என்று டைப் செய்து 54040 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவும்.