
இங்கிலாந்தில் உள்ள லண்டனில் பீம் சென் கோலி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் கடந்த செப்டம்பர் மாதம் லெய்செஸ்டர் பூங்காவிற்கு தனது செல்லப்பிராணியுடன் நடைபயிற்சிச் சென்றுள்ளார். அப்போது சிலர் கோலியை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், 15 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த சிறுவனிடம் நடத்திய விசாரணையில், மேலும் 12 வயது சிறுமி ஒருவர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த சிறுமியையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜார்படுத்தினர். இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது, செப்டம்பரில் கோலி இறந்ததை தொடர்ந்து, மற்றொரு குற்றவாளியான 12 வயது சிறுமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்ட காரணங்களுக்காக அவரது பெயரை வெளியே அறிவிக்கவில்லை. அவர் மீது ஆவண கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.