
செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது புகார் செய்த தேசிய மகளிர் ஆணையம் மணிப்பூர் விஷயத்தில் இதே போல் தாமாக முன்வந்து செயல்பட்டதா உள்ளிட்ட பல கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பிய நிலையில்,
அனைத்திற்கும் பதில் கொடுத்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவிடம், விளையாட்டு வீராங்கனைகள் உங்களிடம் கம்ப்ளைன்ட் கொடுத்தார்கள் அல்லவா? அந்த பாஜக எம்பி மேல நடவடிக்கை எடுத்தீங்களா என்ற கேள்விக்கு,
பதில் சொல்ல முடியாமல் சமாளித்த குஷ்பூ….. தம்பி எப்ப கம்பிளைன்ட் கொடுத்தாங்க? கேட்கிறேன் நானு…. இல்ல… இல்ல…. நீங்க என்கிட்ட கேள்வி கேட்டீங்கன்னா? தம்பி… சரி தம்பி… கம்ப்ளைன்ட் எடுக்கவில்லை என்று யார் சொன்னா உங்களுக்கு ? நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்றால், அது போலீஸ்ல இருக்கு.
அதுதான் சொல்றேன் NCW பொறுத்த வரைக்கும்… தம்பி கேள்வி கேட்டா முதலில் கேட்கிறதா பழகிக்கிடுங்க…. கேள்வி மேல கேள்வி கேட்டீங்கன்னா….. அப்போ நீங்க கேள்வி கேட்டு முடிக்க, நான் பதில் சொல்றேன் என்று அதற்கு பதில் சொல்லாமல் சேரி விவகாரத்தை பதில் சொல்ல பேச ஆரம்பித்தார். நான் சொன்னது பிரெஞ்சு வார்த்தை என்று பேசினார்.