பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதன் விசாரணை முடிந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கனிமொழி எம்பி கூறியதாவது, தனது ஆட்சியில் நடந்த குற்றத்தை தானே விசாரிக்கக் கூடாது என்று எண்ணத்தில் இந்த வழக்கை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிபிஐக்கு மாற்றவில்லை.

இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் ஆட்சியாளர்களால் காப்பாற்றப்பட்டனர் என்பதால் எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பல தரப்பிலும் இருந்து வந்த அழுத்தத்தால் சிபிஐ க்கு மாற்றும்  நிலைக்கு அவர் தள்ளப்பட்டார் என்று கூறினார்.