விராட் கோலி கடந்த 2021-ஆம் ஆண்டு கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி படுமோசமாக விளையாடியது.  இந்த நிலையில் ஐபிஎல் 2025 சீசனுக்கான பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் ரஜத்படிதர் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

சமீப காலமாக சையத் முஸ்டாக் அலி டி20 தொடரில் மத்திய பிரதேச அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் இறுதி சுற்றில் மும்பை அணியிடம் மத்திய பிரதேச அணி தோல்வியுற்றது. இறுதி சுற்றில் ரஜத் 40 பந்துகளில் 81 ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் ஐபிஎல் 18-வது சீசனில் ரஜத் படிதர் கேப்டனாக செயல்படுவார் என அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.